Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:128 — பசுங்கன்று

“எங்கள் இரட்சகரே, உம்மிடம் அடிபணிந்தவர் களாக எங்களை ஆக்குவீராக, மேலும் எங்களுடைய சந்ததியினரில் இருந்தும், உமக்கு அடிபணிந்தவர்களின் ஒரு சமூகம் இருக்கும்படி செய்வீராக. எங்கள் மார்க்கச் சடங்குகளை எங்களுக்கு கற்றுத் தருவீராக. மேலும் எங்களை மீட்டுக்கொள்வீராக. நீரே மீட்பவர், மிக்க கருணையாளர்.

[2:127] புண்ணியஸ்தலத்தின் அஸ்திவாரங்களை உயர்த்தியபடியே, ஆப்ரஹாம் இஸ்மவேலுடன் இணைந்து (அவர்கள் பிரார்த்தித்தனர்): “எங்கள் இரட்சகரே, எங்களிடமிருந்து இதனை ஏற்றுக்கொள்வீராக நீர் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.

[2:129] “எங்கள் இரட்சகரே, மேலும் உம்முடைய வெளிப்பாடுகளை அவர்களுக்கு ஓதிக் காண்பிப்பதற்கும், வேதத்தையும், ஞானத்தையும் அவர்களுக்கு கற்றுத்தருவதற்கும் மேலும் அவர்களை தூய்மைப்படுத்துவதற்கும் ஒரு தூதரை அவர்களிலிருந்தே, எழுப்புவீராக. நீரே சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.”