குர்ஆன் 2:129 — பசுங்கன்று
“எங்கள் இரட்சகரே, மேலும் உம்முடைய வெளிப்பாடுகளை அவர்களுக்கு ஓதிக் காண்பிப்பதற்கும், வேதத்தையும், ஞானத்தையும் அவர்களுக்கு கற்றுத்தருவதற்கும் மேலும் அவர்களை தூய்மைப்படுத்துவதற்கும் ஒரு தூதரை அவர்களிலிருந்தே, எழுப்புவீராக. நீரே சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.”
[2:128] “எங்கள் இரட்சகரே, உம்மிடம் அடிபணிந்தவர் களாக எங்களை ஆக்குவீராக, மேலும் எங்களுடைய சந்ததியினரில் இருந்தும், உமக்கு அடிபணிந்தவர்களின் ஒரு சமூகம் இருக்கும்படி செய்வீராக. எங்கள் மார்க்கச் சடங்குகளை எங்களுக்கு கற்றுத் தருவீராக. மேலும் எங்களை மீட்டுக்கொள்வீராக. நீரே மீட்பவர், மிக்க கருணையாளர்.
[2:130] தன்னுடைய சொந்த ஆன்மாவையே ஏமாற்று பவனைத்தவிர, ஆப்ரஹாமின் மார்க்கத்தை யார் கைவிடக் கூடும்? இந்த உலகில் நாம் அவரை தேர்ந்தெடுத்தோம், மேலும் மறுவுலகில் நன்னெறியாளர்களுடன் அவர் இருப்பார்.