Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:130 — பசுங்கன்று

தன்னுடைய சொந்த ஆன்மாவையே ஏமாற்று பவனைத்தவிர, ஆப்ரஹாமின் மார்க்கத்தை யார் கைவிடக் கூடும்? இந்த உலகில் நாம் அவரை தேர்ந்தெடுத்தோம், மேலும் மறுவுலகில் நன்னெறியாளர்களுடன் அவர் இருப்பார்.

[2:129] “எங்கள் இரட்சகரே, மேலும் உம்முடைய வெளிப்பாடுகளை அவர்களுக்கு ஓதிக் காண்பிப்பதற்கும், வேதத்தையும், ஞானத்தையும் அவர்களுக்கு கற்றுத்தருவதற்கும் மேலும் அவர்களை தூய்மைப்படுத்துவதற்கும் ஒரு தூதரை அவர்களிலிருந்தே, எழுப்புவீராக. நீரே சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.”

[2:131] அவருடைய இரட்சகர் அவரிடத்தில், “அடிபணி வீராக” என கூறிய போது, அவர், “பிரபஞ்சத்தின் இரட்சகருக்கு நான் அடிபணிகின்றேன்,”என்று கூறினார்.