குர்ஆன் 2:127 — பசுங்கன்று
புண்ணியஸ்தலத்தின் அஸ்திவாரங்களை உயர்த்தியபடியே, ஆப்ரஹாம் இஸ்மவேலுடன் இணைந்து (அவர்கள் பிரார்த்தித்தனர்): “எங்கள் இரட்சகரே, எங்களிடமிருந்து இதனை ஏற்றுக்கொள்வீராக நீர் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.
[2:126] ஆப்ரஹாம்: “என் இரட்சகரே, இதனை ஒரு அமைதி நிரம்பிய பிரதேசமாக்குவீராக, மேலும் இதன் மக்களுக்கு கனிகளை வழங்குவீராக. கடவுள்-ன் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொண்டோருக்கும் வழங்குவீராக, “என்று பிரார்த்தித்தார். (கடவுள்) “நம்ப மறுப்பவர் களுக்கும் நான் வழங்குவேன். தற்காலிகமாக அவர்களைச் சுகம் அனுபவிக்கும் படி நான் விடுவேன், பின்னர் நரக தண்டனையிலும் மேலும் துக்ககரமான விதியிலும் புகுத்துவேன்.” என்று கூறினார்.
[2:128] “எங்கள் இரட்சகரே, உம்மிடம் அடிபணிந்தவர் களாக எங்களை ஆக்குவீராக, மேலும் எங்களுடைய சந்ததியினரில் இருந்தும், உமக்கு அடிபணிந்தவர்களின் ஒரு சமூகம் இருக்கும்படி செய்வீராக. எங்கள் மார்க்கச் சடங்குகளை எங்களுக்கு கற்றுத் தருவீராக. மேலும் எங்களை மீட்டுக்கொள்வீராக. நீரே மீட்பவர், மிக்க கருணையாளர்.