குர்ஆன் 2:126 — பசுங்கன்று
ஆப்ரஹாம்: “என் இரட்சகரே, இதனை ஒரு அமைதி நிரம்பிய பிரதேசமாக்குவீராக, மேலும் இதன் மக்களுக்கு கனிகளை வழங்குவீராக. கடவுள்-ன் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொண்டோருக்கும் வழங்குவீராக, “என்று பிரார்த்தித்தார். (கடவுள்) “நம்ப மறுப்பவர் களுக்கும் நான் வழங்குவேன். தற்காலிகமாக அவர்களைச் சுகம் அனுபவிக்கும் படி நான் விடுவேன், பின்னர் நரக தண்டனையிலும் மேலும் துக்ககரமான விதியிலும் புகுத்துவேன்.” என்று கூறினார்.
[2:125] நாம் புண்ணிய ஸ்தலமாகிய (கஃபாவை) மக்களுக்காக ஒரு கூடுமிடமாகவும் மேலும் ஒரு பாதுகாப்பான புகலிடமாகவும் ஆக்கினோம். நீங்கள் ஆப்ரஹாமின் புண்ணிய ஸ்தலத்தை ஒரு வழிபாட்டு ஸ்தலமாக உபயோகிக்கலாம். நாம் ஆப்ரஹாம் மற்றும் இஸ்மவேலிடம் என்னுடைய வீட்டை நீங்கள் அங்கு வருபவர்களுக்காகவும், அங்கு வசிப்பவர்களுக்காகவும், மேலும் குனிபவர்கள் மற்றும் சிரம்பணிபவர்களுக்காகவும் சுத்தம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டோம்.
[2:127] புண்ணியஸ்தலத்தின் அஸ்திவாரங்களை உயர்த்தியபடியே, ஆப்ரஹாம் இஸ்மவேலுடன் இணைந்து (அவர்கள் பிரார்த்தித்தனர்): “எங்கள் இரட்சகரே, எங்களிடமிருந்து இதனை ஏற்றுக்கொள்வீராக நீர் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.