Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:125 — பசுங்கன்று

நாம் புண்ணிய ஸ்தலமாகிய (கஃபாவை) மக்களுக்காக ஒரு கூடுமிடமாகவும் மேலும் ஒரு பாதுகாப்பான புகலிடமாகவும் ஆக்கினோம். நீங்கள் ஆப்ரஹாமின் புண்ணிய ஸ்தலத்தை ஒரு வழிபாட்டு ஸ்தலமாக உபயோகிக்கலாம். நாம் ஆப்ரஹாம் மற்றும் இஸ்மவேலிடம் என்னுடைய வீட்டை நீங்கள் அங்கு வருபவர்களுக்காகவும், அங்கு வசிப்பவர்களுக்காகவும், மேலும் குனிபவர்கள் மற்றும் சிரம்பணிபவர்களுக்காகவும் சுத்தம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டோம்.

[2:124] சில குறிப்பிட்ட கட்டளைகளின் மூலம் ஆப்ரஹாம் அவருடைய இரட்சகரால் சோதனையில் ஆழ்த்தப் பட்டதை நினைவு கூருங்கள், மேலும் அவர் அவற்றை நிறைவேற்றினார். (கடவுள்) “ நான் உம்மை மனிதர்களுக்கு இமாமாக நியமனம் செய்கின்றேன்” என்று கூறினார். அவர், “என் சந்ததியினரையும் கூடத்தானே?” என்று கூறினார். அவர், “என்னுடைய உடன்படிக்கை வரம்பு மீறியவர்களை உட்படுத்தியதில்லை” என்று கூறினார்.

[2:126] ஆப்ரஹாம்: “என் இரட்சகரே, இதனை ஒரு அமைதி நிரம்பிய பிரதேசமாக்குவீராக, மேலும் இதன் மக்களுக்கு கனிகளை வழங்குவீராக. கடவுள்-ன் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொண்டோருக்கும் வழங்குவீராக, “என்று பிரார்த்தித்தார். (கடவுள்) “நம்ப மறுப்பவர் களுக்கும் நான் வழங்குவேன். தற்காலிகமாக அவர்களைச் சுகம் அனுபவிக்கும் படி நான் விடுவேன், பின்னர் நரக தண்டனையிலும் மேலும் துக்ககரமான விதியிலும் புகுத்துவேன்.” என்று கூறினார்.