குர்ஆன் 2:124 — பசுங்கன்று
சில குறிப்பிட்ட கட்டளைகளின் மூலம் ஆப்ரஹாம் அவருடைய இரட்சகரால் சோதனையில் ஆழ்த்தப் பட்டதை நினைவு கூருங்கள், மேலும் அவர் அவற்றை நிறைவேற்றினார். (கடவுள்) “ நான் உம்மை மனிதர்களுக்கு இமாமாக நியமனம் செய்கின்றேன்” என்று கூறினார். அவர், “என் சந்ததியினரையும் கூடத்தானே?” என்று கூறினார். அவர், “என்னுடைய உடன்படிக்கை வரம்பு மீறியவர்களை உட்படுத்தியதில்லை” என்று கூறினார்.
[2:123] எந்த ஒரு ஆன்மாவும் மற்றொரு ஆன்மாவிற்கு உதவி செய்யாத, எவ்வித ஈட்டுத் தொகையும் ஏற்றுக் கொள்ளப்படாத, எந்தப் பரிந்துரையும் பயன் தராத, மேலும் எவரும் உதவி செய்யப் படாத அந்த நாள் குறித்து எச்சரிக்கையுடன் இருந்து கொள்ளுங்கள்.
[2:125] நாம் புண்ணிய ஸ்தலமாகிய (கஃபாவை) மக்களுக்காக ஒரு கூடுமிடமாகவும் மேலும் ஒரு பாதுகாப்பான புகலிடமாகவும் ஆக்கினோம். நீங்கள் ஆப்ரஹாமின் புண்ணிய ஸ்தலத்தை ஒரு வழிபாட்டு ஸ்தலமாக உபயோகிக்கலாம். நாம் ஆப்ரஹாம் மற்றும் இஸ்மவேலிடம் என்னுடைய வீட்டை நீங்கள் அங்கு வருபவர்களுக்காகவும், அங்கு வசிப்பவர்களுக்காகவும், மேலும் குனிபவர்கள் மற்றும் சிரம்பணிபவர்களுக்காகவும் சுத்தம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டோம்.