குர்ஆன் 2:132 — பசுங்கன்று
இன்னும் ஆப்ரஹாம் அவருடைய பிள்ளை களையும் அவ்வாறு செய்யுமாறு உபதேசித்தார். மேலும் ஜேக்கப்பும் அவ்வாறே செய்தார். “என்னுடைய பிள்ளைகளே, கடவுள் உங்க ளுக்கான மார்க்கத்தைச் சுட்டிக்காட்டி விட்டார், அடிபணிந்தவர்களாகவே தவிர மரணித்துவிடாதீர்கள்.”
[2:131] அவருடைய இரட்சகர் அவரிடத்தில், “அடிபணி வீராக” என கூறிய போது, அவர், “பிரபஞ்சத்தின் இரட்சகருக்கு நான் அடிபணிகின்றேன்,”என்று கூறினார்.
[2:133] ஜேக்கபை அவருடைய மரணப்படுக்கையில் நீர் பார்த்து இருப்பீரேயானால்; அவர் அவருடைய பிள்ளைகளிடத்தில் “நான் இறந்த பிறகு நீங்கள் யாரை வழிபடுவீர்கள்?” என்று கூறினார். அவர்கள், “நாங்கள் உம்முடைய தெய்வமும், உம்முடைய தந்தையராகிய ஆப்ரஹாம், இஸ்மவேல் மற்றும் ஐசக் ஆகியோருடைய தெய்வமுமாகிய அந்த ஒரே தெய்வத்தை வழிபடுவோம். அவருக்கே நாங்கள் அடிபணிந்தவர்களாக இருக்கின்றோம்” என்று கூறினார்கள்.