Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:134 — பசுங்கன்று

கடந்த காலத்திலிருந்துள்ள ஒரு சமூகம் இவ்விதமானதே. அவர்கள் சம்பாதித்த வற்றிற்கு அவர்களே பொறுப்பாளர்கள், மேலும் நீங்கள் சம்பாதித்தவற்றிற்கு நீங்களே பொறுப்பாளர்கள், அவர்கள் செய்த எந்த ஒன்றிற்கும் நீங்கள் பொறுப்பாளர்கள் அல்ல.

[2:133] ஜேக்கபை அவருடைய மரணப்படுக்கையில் நீர் பார்த்து இருப்பீரேயானால்; அவர் அவருடைய பிள்ளைகளிடத்தில் “நான் இறந்த பிறகு நீங்கள் யாரை வழிபடுவீர்கள்?” என்று கூறினார். அவர்கள், “நாங்கள் உம்முடைய தெய்வமும், உம்முடைய தந்தையராகிய ஆப்ரஹாம், இஸ்மவேல் மற்றும் ஐசக் ஆகியோருடைய தெய்வமுமாகிய அந்த ஒரே தெய்வத்தை வழிபடுவோம். அவருக்கே நாங்கள் அடிபணிந்தவர்களாக இருக்கின்றோம்” என்று கூறினார்கள்.

[2:135] அவர்கள், “நீங்கள் வழிகாட்டப்பட வேண்டு மென்றால் யூதராகவோ அல்லது கிறிஸ்த வராகவோ இருக்க வேண்டும்.” என்று கூறினார்கள். “நாங்கள் ஆப்ரஹாமின் மார்க்கத்தையே பின்பற்றுகின்றோம்-ஏகத்துவம்-அவர் ஒருபோதும் இணைத்தெய்வ வழிபாடு செய்தவராக இருக்கவில்லை” என்று கூறுவீராக.