குர்ஆன் 2:135 — பசுங்கன்று
அவர்கள், “நீங்கள் வழிகாட்டப்பட வேண்டு மென்றால் யூதராகவோ அல்லது கிறிஸ்த வராகவோ இருக்க வேண்டும்.” என்று கூறினார்கள். “நாங்கள் ஆப்ரஹாமின் மார்க்கத்தையே பின்பற்றுகின்றோம்-ஏகத்துவம்-அவர் ஒருபோதும் இணைத்தெய்வ வழிபாடு செய்தவராக இருக்கவில்லை” என்று கூறுவீராக.
[2:134] கடந்த காலத்திலிருந்துள்ள ஒரு சமூகம் இவ்விதமானதே. அவர்கள் சம்பாதித்த வற்றிற்கு அவர்களே பொறுப்பாளர்கள், மேலும் நீங்கள் சம்பாதித்தவற்றிற்கு நீங்களே பொறுப்பாளர்கள், அவர்கள் செய்த எந்த ஒன்றிற்கும் நீங்கள் பொறுப்பாளர்கள் அல்ல.
[2:136] “நாங்கள் கடவுள்-ன் மீதும், மேலும் எங்களுக்கு இறக்கி அனுப்பப்பட்டதன் மீதும், மேலும் ஆப்ரஹாம் , இஸ்மவேல், ஐசக்,ஜேக்கப் மற்றும் குலத்தலைவர்களுக்கு இறக்கி அனுப்பப்பட்டதன் மீதும்; மேலும் மோஸஸ், இயேசு மற்றும் அனைத்து வேதம் வழங்கப் பட்டவர்களுக்கும், அவர்களுடைய இரட்சகரிட மிருந்து கொடுக்கப்பட்டதன் மீதும் நம்பிக்கை கொள்கின்றோம். அவர்களுக்கிடையில் நாங்கள் எந்த பேதமும் பாராட்டமாட்டோம். அவருக்கு மட்டுமே நாங்கள் அடிபணிந்தவர்கள்” என்று கூறுவீராக.