குர்ஆன் 2:136 — பசுங்கன்று
قولوا ءامَنّا بِاللَّهِ وَما أُنزِلَ إِلَينا وَما أُنزِلَ إِلىٰ إِبرٰهۦمَ وَإِسمٰعيلَ وَإِسحٰقَ وَيَعقوبَ وَالأَسباطِ وَما أوتِىَ موسىٰ وَعيسىٰ وَما أوتِىَ النَّبِيّونَ مِن رَبِّهِم لا نُفَرِّقُ بَينَ أَحَدٍ مِنهُم وَنَحنُ لَهُ مُسلِمونَ
“நாங்கள் கடவுள்-ன் மீதும், மேலும் எங்களுக்கு இறக்கி அனுப்பப்பட்டதன் மீதும், மேலும் ஆப்ரஹாம் , இஸ்மவேல், ஐசக்,ஜேக்கப் மற்றும் குலத்தலைவர்களுக்கு இறக்கி அனுப்பப்பட்டதன் மீதும்; மேலும் மோஸஸ், இயேசு மற்றும் அனைத்து வேதம் வழங்கப் பட்டவர்களுக்கும், அவர்களுடைய இரட்சகரிட மிருந்து கொடுக்கப்பட்டதன் மீதும் நம்பிக்கை கொள்கின்றோம். அவர்களுக்கிடையில் நாங்கள் எந்த பேதமும் பாராட்டமாட்டோம். அவருக்கு மட்டுமே நாங்கள் அடிபணிந்தவர்கள்” என்று கூறுவீராக.
[2:135] அவர்கள், “நீங்கள் வழிகாட்டப்பட வேண்டு மென்றால் யூதராகவோ அல்லது கிறிஸ்த வராகவோ இருக்க வேண்டும்.” என்று கூறினார்கள். “நாங்கள் ஆப்ரஹாமின் மார்க்கத்தையே பின்பற்றுகின்றோம்-ஏகத்துவம்-அவர் ஒருபோதும் இணைத்தெய்வ வழிபாடு செய்தவராக இருக்கவில்லை” என்று கூறுவீராக.
[2:137] நீங்கள் கொண்டது போல் அவர்களும் நம்பிக்கை கொண்டால், பின்னர் அவர்களும் வழி நடத்தப்படுவர். ஆனால் அவர்கள் திரும்பி விட்டால், பின்னர் அவர்கள் எதிர்க்கக் கூடியவர்களே, கடவுள் அவர்களுடைய எதிர்ப்பிலிருந்தும் உங்களை காப்பாற்றுவார். அவர் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.