Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:137 — பசுங்கன்று

நீங்கள் கொண்டது போல் அவர்களும் நம்பிக்கை கொண்டால், பின்னர் அவர்களும் வழி நடத்தப்படுவர். ஆனால் அவர்கள் திரும்பி விட்டால், பின்னர் அவர்கள் எதிர்க்கக் கூடியவர்களே, கடவுள் அவர்களுடைய எதிர்ப்பிலிருந்தும் உங்களை காப்பாற்றுவார். அவர் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.

[2:136] “நாங்கள் கடவுள்-ன் மீதும், மேலும் எங்களுக்கு இறக்கி அனுப்பப்பட்டதன் மீதும், மேலும் ஆப்ரஹாம் , இஸ்மவேல், ஐசக்,ஜேக்கப் மற்றும் குலத்தலைவர்களுக்கு இறக்கி அனுப்பப்பட்டதன் மீதும்; மேலும் மோஸஸ், இயேசு மற்றும் அனைத்து வேதம் வழங்கப் பட்டவர்களுக்கும், அவர்களுடைய இரட்சகரிட மிருந்து கொடுக்கப்பட்டதன் மீதும் நம்பிக்கை கொள்கின்றோம். அவர்களுக்கிடையில் நாங்கள் எந்த பேதமும் பாராட்டமாட்டோம். அவருக்கு மட்டுமே நாங்கள் அடிபணிந்தவர்கள்” என்று கூறுவீராக.

[2:138] கடவுள்-ன் வழிமுறை இவ்விதமானதே, மேலும் எவருடைய வழிமுறை கடவுள்-உடையதை விடச் சிறந்தது? “அவரை மட்டுமே நாங்கள் வழிபடுகின்றோம்’’.