குர்ஆன் 2:138 — பசுங்கன்று
கடவுள்-ன் வழிமுறை இவ்விதமானதே, மேலும் எவருடைய வழிமுறை கடவுள்-உடையதை விடச் சிறந்தது? “அவரை மட்டுமே நாங்கள் வழிபடுகின்றோம்’’.
[2:137] நீங்கள் கொண்டது போல் அவர்களும் நம்பிக்கை கொண்டால், பின்னர் அவர்களும் வழி நடத்தப்படுவர். ஆனால் அவர்கள் திரும்பி விட்டால், பின்னர் அவர்கள் எதிர்க்கக் கூடியவர்களே, கடவுள் அவர்களுடைய எதிர்ப்பிலிருந்தும் உங்களை காப்பாற்றுவார். அவர் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.
[2:139] “கடவுள் எங்களுடைய இரட்சகராகவும், மேலும் உங்களுடைய இரட்சகராகவும் இருக்கும் பொழுது, அவரைப்பற்றி எங்களுடன் நீங்கள் வாதிடுகின்றீர்களா? எங்களுடைய செயல் களுக்கு நாங்கள் பொறுப்பாளிகள், மேலும் உங்களுடைய செயல்களுக்கு நீங்கள் பொறுப்பாளிகள். அவருக்கு மட்டுமே நாங்கள் அர்ப்பணித்தவர்கள்” என்று கூறுவீராக.