குர்ஆன் 2:140 — பசுங்கன்று
ஆப்ரஹாம், இஸ்மவேல், ஐசக், ஜேக்கப் மற்றும் குலத்தலைவர்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக இருந்தனர் என்று நீங்கள் கூறுகின்றீர்களா? “ கடவுள்-ஐ விட நன்கு தெரியுமா உங்களுக்கு? கடவுள்-இடமிருந்து கற்றுக்கொண்ட ஒரு அத்தாட்சியை மறைப்பவனை விட மிக தீயவன் யார்? நீங்கள் செய்யும் எந்த ஒன்றையும் ஒரு போதும் கடவுள் அறியாதவர் அல்ல,” என்று கூறுவீராக.
[2:139] “கடவுள் எங்களுடைய இரட்சகராகவும், மேலும் உங்களுடைய இரட்சகராகவும் இருக்கும் பொழுது, அவரைப்பற்றி எங்களுடன் நீங்கள் வாதிடுகின்றீர்களா? எங்களுடைய செயல் களுக்கு நாங்கள் பொறுப்பாளிகள், மேலும் உங்களுடைய செயல்களுக்கு நீங்கள் பொறுப்பாளிகள். அவருக்கு மட்டுமே நாங்கள் அர்ப்பணித்தவர்கள்” என்று கூறுவீராக.
[2:141] அது கடந்த காலத்தில் இருந்த ஒரு சமூகம் ஆகும். அவர்கள் சம்பாதித்தவற்றிற்கு அவர்கள் பொறுப்பாளிகள், மேலும் நீங்கள் சம்பாதித்தவற்றிற்கு நீங்கள் பொறுப்பாளிகள். அவர்கள் செய்த எந்த ஒன்றிற்கும், நீங்கள் பொறுப்பாளிகள் அல்ல.