Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:149 — பசுங்கன்று

நீர் எங்கு சென்றாலும், நீர் உம்முடைய முகத்தை புனித மஸ்ஜிதை* நோக்கி (ஸலாத்தின்போது) திருப்பிக் கொள்ள வேண்டும். இது உங்களுடைய இரட்சகரிடமிருந்துள்ள சத்தியம் ஆகும். நீங்கள் அனைவரும் செய்யும் எந்த ஒன்றையும் ஒருபோதும் கடவுள் அறியாதவர் அல்ல.

[2:148] நீங்கள் ஒவ்வொருவரும் பின்பற்றுவதற்கு திசையைத் தேர்ந்தெடுக்கின்றீர்கள்; நீங்கள் நன்னெறியை நோக்கி விரைந்து செல்ல வேண்டும். நீங்கள் எங்கிருந்த போதிலும், கடவுள் உங்கள் அனைவரையும் ஒன்று கூட்டுவார். கடவுள் சர்வ சக்தியுடையவர்.

[2:150] நீர் எங்கு சென்றாலும், நீர் உம்முடைய முகத்தை (ஸலாத்தின்போது) புனித மஸ்ஜிதை நோக்கி திருப்பிக் கொள்ள வேண்டும், நீங்கள் எங்கிருந்த போதிலும் அதனை நோக்கி (ஸலாத்தின்போது) உங்கள் முகங்களை திருப்பிக்கொள்ள வேண்டும். இவ்விதமாக, அவர்களில் உள்ள வரம்பு மீறியவர்களைத்தவிர மக்களிடத்தில், உங்களுக்கெதிராக தர்க்கம் இருக்காது. அவர்களுக்கு அஞ்சாதீர், பதிலாக எனக்கே அஞ்சுவீராக, உங்கள் மீதான என்னுடைய அருட்கொடைகளை நான் பின்னர் பூர்த்தி செய்வேன், நீங்கள் வழிகாட்டப் பட்டவராகலாம்.