குர்ஆன் 2:148 — பசுங்கன்று
நீங்கள் ஒவ்வொருவரும் பின்பற்றுவதற்கு திசையைத் தேர்ந்தெடுக்கின்றீர்கள்; நீங்கள் நன்னெறியை நோக்கி விரைந்து செல்ல வேண்டும். நீங்கள் எங்கிருந்த போதிலும், கடவுள் உங்கள் அனைவரையும் ஒன்று கூட்டுவார். கடவுள் சர்வ சக்தியுடையவர்.
[2:147] இது உங்களுடைய இரட்சகரிடமிருந்துள்ள சத்தியம் ஆகும்; எந்த விதமான சந்தேகத்திற்கும் இடம் கொடுக்காதீர்கள்.
[2:149] நீர் எங்கு சென்றாலும், நீர் உம்முடைய முகத்தை புனித மஸ்ஜிதை* நோக்கி (ஸலாத்தின்போது) திருப்பிக் கொள்ள வேண்டும். இது உங்களுடைய இரட்சகரிடமிருந்துள்ள சத்தியம் ஆகும். நீங்கள் அனைவரும் செய்யும் எந்த ஒன்றையும் ஒருபோதும் கடவுள் அறியாதவர் அல்ல.