குர்ஆன் 2:147 — பசுங்கன்று
இது உங்களுடைய இரட்சகரிடமிருந்துள்ள சத்தியம் ஆகும்; எந்த விதமான சந்தேகத்திற்கும் இடம் கொடுக்காதீர்கள்.
[2:146] வேதத்தை பெற்றவர்கள் இதில் உள்ள உண்மையை, தங்களுடைய சொந்தக் குழந்தைகளை அறிவது போல் அவர்கள் அறிவார்கள், ஆயினும், அவர் களில் சிலர் அறிந்து கொண்டே, உண்மையை மறைக்கின்றார்கள்.
[2:148] நீங்கள் ஒவ்வொருவரும் பின்பற்றுவதற்கு திசையைத் தேர்ந்தெடுக்கின்றீர்கள்; நீங்கள் நன்னெறியை நோக்கி விரைந்து செல்ல வேண்டும். நீங்கள் எங்கிருந்த போதிலும், கடவுள் உங்கள் அனைவரையும் ஒன்று கூட்டுவார். கடவுள் சர்வ சக்தியுடையவர்.