குர்ஆன் 2:151 — பசுங்கன்று
நம்முடைய வெளிப்பாடுகளை உங்களுக்கு ஓதிக்காண்பிப்பதற்காகவும், உங்களை பரிசுத்தப்படுத்துவதற்காகவும், வேதத்தையும், ஞானத்தையும் உங்களுக்கு கற்பிப்பதற் காகவும் மேலும் நீங்கள் ஒருபோதும் அறியா திருந்தவைகளை உங்களுக்கு கற்பிப்பதற் காகவும் உங்களுக்கிடையிலிருந்து ஒரு தூதரை அனுப்புவது (அருட்கொடைகள்) ஆகும்.
[2:150] நீர் எங்கு சென்றாலும், நீர் உம்முடைய முகத்தை (ஸலாத்தின்போது) புனித மஸ்ஜிதை நோக்கி திருப்பிக் கொள்ள வேண்டும், நீங்கள் எங்கிருந்த போதிலும் அதனை நோக்கி (ஸலாத்தின்போது) உங்கள் முகங்களை திருப்பிக்கொள்ள வேண்டும். இவ்விதமாக, அவர்களில் உள்ள வரம்பு மீறியவர்களைத்தவிர மக்களிடத்தில், உங்களுக்கெதிராக தர்க்கம் இருக்காது. அவர்களுக்கு அஞ்சாதீர், பதிலாக எனக்கே அஞ்சுவீராக, உங்கள் மீதான என்னுடைய அருட்கொடைகளை நான் பின்னர் பூர்த்தி செய்வேன், நீங்கள் வழிகாட்டப் பட்டவராகலாம்.
[2:152] நான் உங்களை நினைவு கூரும் பொருட்டு என்னை நீங்கள் நினைவு கூர வேண்டும். மேலும் எனக்கு நன்றியுடையவர்களாக இருங்கள்; நன்றி கெட்டவர்களாக இருக்காதீர்கள்.