குர்ஆன் 2:158 — பசுங்கன்று
ஸபா மற்றும் மர்வா குன்றுகள் கடவுள்-ஆல் விதிக்கப்பட்ட சடங்குகளில் உள்ளவை, ஹஜ் அல்லது உம்ரா செய்கின்ற எவர் ஒருவரும் அவற்றிற்கிடையில் உள்ள தூரத்தைக் கடந்து செல்வதால் எந்தக்குற்றமும் செய்து விடுவதில்லை, ஒருவர் தாமாகவே முன்வந்து நன்னெறியான காரியங்களை அதிகமாகச் செய்தால், அப்போது கடவுள் பாராட்டுபவராகவும்,எல்லாம் அறிந்தவராகவும் இருக்கின்றார்.
[2:157] இத்தகையோர் தங்கள் இரட்சகரிடத்தில் இருந்து அருட்கொடைகளுக்கும் கருணை க்கும் தகுதி பெற்றுவிட்டனர். இவர்களே நேர்வழியில் செலுத்தப்பட்டவர்கள்.
[2:159] நம்முடைய வெளிப்பாடுகளையும், வழிகாட்ட லையும் மக்களுக்காக வேதத்தில் அவைகள் அறிவிக்கப்பட்ட பின்னரும் மறைக்கின்ற வர்கள் கடவுள்-ஆல் கண்டனம் செய்யப் படுகின்றார்கள். கண்டனம் செய்பவர்கள் அனைவராலும் அவர்கள் கண்டனம் செய்யப்படுகின்றார்கள்.