குர்ஆன் 2:164 — பசுங்கன்று
வானங்கள் மற்றும் பூமியின் படைப்பிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும், மக்களின் பயன்பாட்டிற்காக பெருங்கடலில் சுற்றிவரும் கப்பல்களிலும், இறந்த நிலத்தை உயிர்ப்பித்து அதில் எல்லா வகையான உயிரினங்களையும் பரவவிட வானிலிருந்து கடவுள் கீழே அனுப்பும் தண்ணீரிலும், காற்றுகள் கையாளப்படுவதிலும், வானத்திற்கும் பூமிக்கும் நடுவில் வைக்கப்பட்டுள்ள மேகங்களிலும், புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்குப் போதுமான சான்றுகள் உள்ளன.
[2:163] உங்களின் தெய்வம் ஒரே தெய்வம், அவரைத் தவிர தெய்வம் இல்லை, மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்.
[2:165] இருப்பினும், சில மனிதர்கள் கடவுள்-க்குப் போட்டியாக இணைத்தெய்வங்களை அமைத்து மேலும் அவர்களைக் கடவுள்-ஐப் போல் நேசிக் கின்றார்கள். நம்பிக்கையாளர்களோ கடவுள்-ஐ அதிகம் நேசிக்கின்றார்கள். தண்டனையைக் காணும் சமயம் வரம்பு மீறுபவர்கள் மட்டும் தங்களையே காண முடிந்தால்! அதன் பின்னர் கடவுள்-க்கு மட்டுமே அனைத்து வல்லமையும் உரியது என்றும், மேலும் கடவுள்-ன் தண்டனை அச்சமூட்டத்தக்கது என்றும் கண்டு கொள்வார்கள்.