Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:174 — பசுங்கன்று

ஒரு மலிவான உலக லாபத்திற்குப் பகரமாக, கடவுள்-ன் வெளிப்பாடுகளை மறைப்பவர்கள், தங்கள் வயிறுகளில் நெருப்பைத்தான் உண்ணு கின்றார்கள். மீண்டும் உயிர்ப்பித்தெழுப் பப்படும் நாளில், கடவுள் அவர்களுடன் பேச மாட்டார், அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டார். அவர்கள் வலிமிகுந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டார்கள்.

[2:173] நீங்கள் உண்ணுவதற்கு (மனிதக்குறுக்கீடின்றி) தாமாகவே செத்த பிராணிகளை, இரத்தத்தை, பன்றிகளின் இறைச்சியை, மேலும் கடவுள் அன்றி மற்றவற்றிற்கு அர்ப்பணிக்கப்பட்ட பிராணிகளை மட்டுமே அவர் தடை செய்கின் றார். பாவநோக்கிலோ, அல்லது வேண்டு மென்றோ இல்லாமல் (இவற்றை உண்ண) ஒருவர் நிர்பந்திக்கப்பட்டால், அவர் எந்தப்பாவத் திற்கும் உள்ளாவதில்லை. கடவுள் மன்னிப் பவராகவும், மிக்க கருணையாளராகவும் இருக்கின்றார்.

[2:175] அவர்கள் தான் வழிகாட்டலுக்குப் பதிலாக வழி கேட்டினையும், மேலும் மன்னிப்பிற்கு பதிலாக தண்டனையையும் தேர்வு செய்து கொண்டவர் கள். அதன் விளைவாக அவர்கள் நரகத்தில் நிரந்தரமாக இருந்தாக வேண்டும்.