Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:175 — பசுங்கன்று

அவர்கள் தான் வழிகாட்டலுக்குப் பதிலாக வழி கேட்டினையும், மேலும் மன்னிப்பிற்கு பதிலாக தண்டனையையும் தேர்வு செய்து கொண்டவர் கள். அதன் விளைவாக அவர்கள் நரகத்தில் நிரந்தரமாக இருந்தாக வேண்டும்.

[2:174] ஒரு மலிவான உலக லாபத்திற்குப் பகரமாக, கடவுள்-ன் வெளிப்பாடுகளை மறைப்பவர்கள், தங்கள் வயிறுகளில் நெருப்பைத்தான் உண்ணு கின்றார்கள். மீண்டும் உயிர்ப்பித்தெழுப் பப்படும் நாளில், கடவுள் அவர்களுடன் பேச மாட்டார், அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டார். அவர்கள் வலிமிகுந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டார்கள்.

[2:176] இது ஏனெனில், கடவுள் சத்தியத்தைத் தாங்கியதாக, இவ்வேதத்தை, வெளிப்படுத்தியுள்ளார், மேலும் எவர்கள் இவ்வேதத்தினை மறுக்கின்றார்களோ அவர்களே மிகவும் தீவிரமான எதிரிகள் ஆவர்.