Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:176 — பசுங்கன்று

இது ஏனெனில், கடவுள் சத்தியத்தைத் தாங்கியதாக, இவ்வேதத்தை, வெளிப்படுத்தியுள்ளார், மேலும் எவர்கள் இவ்வேதத்தினை மறுக்கின்றார்களோ அவர்களே மிகவும் தீவிரமான எதிரிகள் ஆவர்.

[2:175] அவர்கள் தான் வழிகாட்டலுக்குப் பதிலாக வழி கேட்டினையும், மேலும் மன்னிப்பிற்கு பதிலாக தண்டனையையும் தேர்வு செய்து கொண்டவர் கள். அதன் விளைவாக அவர்கள் நரகத்தில் நிரந்தரமாக இருந்தாக வேண்டும்.

[2:177] நன்னெறி என்பது, உங்கள் முகங்களை கிழக்கையோ அல்லது மேற்கையோ, நோக்கித் திருப்புவதில் இல்லை. நன்னெறியாளர்கள் என்பவர்கள் கடவுள்-ஐ, இறுதிநாளை, வானவர்களை, வேதத்தினை, மேலும் வேதம் வழங்கப்பட்டவர்களை, நம்பிக்கை கொண்ட வர்கள். இன்னும் அவர்கள் உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், தேவையுள்ளோருக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசிப்போருக்கும், அடிமைகளை விடுவிப் பதற்கும், மகிழ்ச்சியுடன் பணம் தருவார்கள், இன்னும் அவர்கள் தொடர்புத்தொழுகைகளை (ஸலாத்) கடைப் பிடிப்பார்கள்,கடமையான தர்மத்(ஜகாத்) தையும் தருவார்கள், இன்னும் அவர்கள் வாக்குக் கொடுத்த போதெல்லாம் தங்கள் வார்த்தையைக் காப்பாற்றுவார்கள், இன்னும் அவர்கள் அடக்குமுறை, கஷ்டம் மற்றும் போர் இவற்றை எதிர் கொண்டால் உறுதியாய் விடாமுயற்சியோடிருப்பார்கள். இவர்களே உண்மையாளர்கள்; இவர்களே நன்னெறி யாளர்கள்.