Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:177 — பசுங்கன்று

لَيسَ البِرَّ أَن تُوَلّوا وُجوهَكُم قِبَلَ المَشرِقِ وَالمَغرِبِ وَلٰكِنَّ البِرَّ مَن ءامَنَ بِاللَّهِ وَاليَومِ الءاخِرِ وَالمَلٰئِكَةِ وَالكِتٰبِ وَالنَّبِيّۦنَ وَءاتَى المالَ عَلىٰ حُبِّهِ ذَوِى القُربىٰ وَاليَتٰمىٰ وَالمَسٰكينَ وَابنَ السَّبيلِ وَالسّائِلينَ وَفِى الرِّقابِ وَأَقامَ الصَّلوٰةَ وَءاتَى الزَّكوٰةَ وَالموفونَ بِعَهدِهِم إِذا عٰهَدوا ۖ وَالصّٰبِرينَ فِى البَأساءِ وَالضَّرّاءِ وَحينَ البَأسِ ۗ أُولٰئِكَ الَّذينَ صَدَقوا ۖ وَأُولٰئِكَ هُمُ المُتَّقونَ

நன்னெறி என்பது, உங்கள் முகங்களை கிழக்கையோ அல்லது மேற்கையோ, நோக்கித் திருப்புவதில் இல்லை. நன்னெறியாளர்கள் என்பவர்கள் கடவுள்-ஐ, இறுதிநாளை, வானவர்களை, வேதத்தினை, மேலும் வேதம் வழங்கப்பட்டவர்களை, நம்பிக்கை கொண்ட வர்கள். இன்னும் அவர்கள் உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், தேவையுள்ளோருக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசிப்போருக்கும், அடிமைகளை விடுவிப் பதற்கும், மகிழ்ச்சியுடன் பணம் தருவார்கள், இன்னும் அவர்கள் தொடர்புத்தொழுகைகளை (ஸலாத்) கடைப் பிடிப்பார்கள்,கடமையான தர்மத்(ஜகாத்) தையும் தருவார்கள், இன்னும் அவர்கள் வாக்குக் கொடுத்த போதெல்லாம் தங்கள் வார்த்தையைக் காப்பாற்றுவார்கள், இன்னும் அவர்கள் அடக்குமுறை, கஷ்டம் மற்றும் போர் இவற்றை எதிர் கொண்டால் உறுதியாய் விடாமுயற்சியோடிருப்பார்கள். இவர்களே உண்மையாளர்கள்; இவர்களே நன்னெறி யாளர்கள்.

[2:176] இது ஏனெனில், கடவுள் சத்தியத்தைத் தாங்கியதாக, இவ்வேதத்தை, வெளிப்படுத்தியுள்ளார், மேலும் எவர்கள் இவ்வேதத்தினை மறுக்கின்றார்களோ அவர்களே மிகவும் தீவிரமான எதிரிகள் ஆவர்.

[2:178] நம்பிக்கை கொண்டோரே, கொலை விஷயத் தைக் கையாளும்போது சமநீதியே சட்டம் என்பது உங்களுக்கு விதிக்கப் பட்டுள்ளது -சுதந்திரமானவருக்குச் சுதந்திரமானவர், அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண். பலியானவரின் சுற்றத்தாரால் ஒருவருக்கு தண்டனை மன்னிக்கப்பட்டால், பாராட்டுகின்ற வகையில் ஒரு பிராயச்சித்தம் வழக்கத்தில் உள்ளது. மேலும் நியாயமானதொரு நஷ்டஈடு செலுத்தப்பட வேண்டும். இது உங்கள் இரட்சகரிடமிருந்துள்ள துன்பத்துடைப்பும் மற்றும் கருணையுமாகும். இதற்கு மேலும் எவரேனும் வரம்பு மீறினால் வலிமிகுந்ததொரு தண்டனைக்குள்ளாவார்.