Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:179 — பசுங்கன்று

அறிவுத்திறன் உடையவர்களே, நீங்கள் நன்னெறியாளர்களாக ஆகும் பொருட்டு சமநீதி என்பது உங்களுக்கு உயிர்காக்கும் ஒரு சட்டமாகும்.

[2:178] நம்பிக்கை கொண்டோரே, கொலை விஷயத் தைக் கையாளும்போது சமநீதியே சட்டம் என்பது உங்களுக்கு விதிக்கப் பட்டுள்ளது -சுதந்திரமானவருக்குச் சுதந்திரமானவர், அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண். பலியானவரின் சுற்றத்தாரால் ஒருவருக்கு தண்டனை மன்னிக்கப்பட்டால், பாராட்டுகின்ற வகையில் ஒரு பிராயச்சித்தம் வழக்கத்தில் உள்ளது. மேலும் நியாயமானதொரு நஷ்டஈடு செலுத்தப்பட வேண்டும். இது உங்கள் இரட்சகரிடமிருந்துள்ள துன்பத்துடைப்பும் மற்றும் கருணையுமாகும். இதற்கு மேலும் எவரேனும் வரம்பு மீறினால் வலிமிகுந்ததொரு தண்டனைக்குள்ளாவார்.

[2:180] மரணம் நெருங்கி வரும் போது பெற்றோர் மற்றும் உறவினர்களின் நலன் கருதி நீங்கள் நீதத்துடன் ஓர் உயில் எழுத வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கின்றது. இது நன்னெறி யாளர்கள் மீது ஒரு கடமையாகும்.