குர்ஆன் 2:183 — பசுங்கன்று
நம்பிக்கை கொண்டோரே, உங்களுக்கு முன்னிருந்தோர் மீது விதிக்கப்பட்டது போல, நோன்பிருத்தல் உங்கள் மீதும் விதிக்கப் படுகின்றது, அதன் மூலம் நீங்கள் மீட்சியடைய லாம்.
[2:182] பெரும் அநீதியையோ அல்லது பாரபட்சத்தை யோ உயிலளித்தவரின் பக்கம் ஒருவர் கண்டு, உயிலின் பால் நீதியை மீட்டுக் கொண்டு வர சரி செய்யும் நடவடிக்கை எடுத்தால், அவர் தவறு எதுவும் செய்யவில்லை . கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[2:184] குறிப்பிட்ட நாட்கள் (நோன்பிருத்தலுக்கென நியமிக்கப்பட்டுள்ளது); ஒருவர் நோயிலோ, பிரயாணத்திலோ இருந்தால், ஒரு சமமான எண்ணிக்கையுள்ள மற்ற நாட்களைக் கொண்டு பகரமாக்கி கொள்ளலாம். நோன்பி ருக்க முடிந்தவர்களாயினும், மிகுந்த கஷ்டப் படுவார்கள் என்றால், நோன்பை முறிக்கும் ஒவ்வொரு நாளைக்கும் ஒரு ஏழை நபருக்கு உணவளிப்பது கொண்டு பகரமாக்கலாம். ஒருவர் (அதிக நன்னெறியான காரியங்களில்) தாமாக முன்வந்தால், அது சிறப்பே ஆகும். ஆயினும் நீங்கள் அறிவீர்களாயின் நோன்பிருத் தலே உங்களுக்கு மிகவும் சிறந்தது.