குர்ஆன் 2:182 — பசுங்கன்று
பெரும் அநீதியையோ அல்லது பாரபட்சத்தை யோ உயிலளித்தவரின் பக்கம் ஒருவர் கண்டு, உயிலின் பால் நீதியை மீட்டுக் கொண்டு வர சரி செய்யும் நடவடிக்கை எடுத்தால், அவர் தவறு எதுவும் செய்யவில்லை . கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[2:181] எவரேனும் தான் செவியேற்ற ஓர் உயிலினை மாற்றியமைத்தால் அதை மாற்றிய பாவம் அத்தகைய மாற்றுதலுக்குப் பொறுப்பானவர் கள் மீதே சாரும். கடவுள் செவியேற்பவர், அறிபவர்.
[2:183] நம்பிக்கை கொண்டோரே, உங்களுக்கு முன்னிருந்தோர் மீது விதிக்கப்பட்டது போல, நோன்பிருத்தல் உங்கள் மீதும் விதிக்கப் படுகின்றது, அதன் மூலம் நீங்கள் மீட்சியடைய லாம்.