குர்ஆன் 2:192 — பசுங்கன்று
அவர்கள் விலகிக் கொண்டார்கள் எனில் அதன் பின்னர் கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[2:191] உங்களுக்கெதிராக யுத்தம் புரிவோரை நீங்கள் கொல்லலாம், இன்னும் உங்களை அவர்கள் வெளியேற்றிய அவ்விடத்திலிருந்து அவர் களை நீங்கள் வெளியேற்றலாம். அடக்கு முறை செய்வது கொலையைவிட மோசமானது. புனித மஸ்ஜிதின் அருகில் அவர்கள் உங்களைத் தாக்கினால் தவிர அவர்களிடம் அங்கே சண்டையிடாதீர்கள். அவர்கள் உங்களைத் தாக்கினால், நீங்கள் அவர்களைக் கொல்லலாம். இதுதான் நம்ப மறுப்பவர்களுக்கு சரியான தண்டனையாகும்.
[2:193] அடக்குமுறையினை களைவதற்கும், கடவுள்-ஐ சுதந்திரமாக வழிபடுவதற்கும் நீங்கள் அவர்களிடம் சண்டையிடலாம். அவர்கள் விலகிக்கொண்டால் நீங்கள் வலுச்சண்டை செய்ய வேண்டாம், வலுச்சண்டை செய்வோருக்கு எதிராக மட்டுமே வலுச்சண்டை அனுமதிக்கப் பட்டுள்ளது.