Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:191 — பசுங்கன்று

உங்களுக்கெதிராக யுத்தம் புரிவோரை நீங்கள் கொல்லலாம், இன்னும் உங்களை அவர்கள் வெளியேற்றிய அவ்விடத்திலிருந்து அவர் களை நீங்கள் வெளியேற்றலாம். அடக்கு முறை செய்வது கொலையைவிட மோசமானது. புனித மஸ்ஜிதின் அருகில் அவர்கள் உங்களைத் தாக்கினால் தவிர அவர்களிடம் அங்கே சண்டையிடாதீர்கள். அவர்கள் உங்களைத் தாக்கினால், நீங்கள் அவர்களைக் கொல்லலாம். இதுதான் நம்ப மறுப்பவர்களுக்கு சரியான தண்டனையாகும்.

[2:190] உங்களைத் தாக்குபவர்களுக்கெதிராக நீங்கள் கடவுள்-ன் பாதையில் சண்டை யிடலாம், ஆனால் வலுச்சண்டைக்கு செல்லாதீர்கள். வலுச்சண்டையிடுபவர்களைக் கடவுள் நேசிப்பதில்லை.

[2:192] அவர்கள் விலகிக் கொண்டார்கள் எனில் அதன் பின்னர் கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.