Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:190 — பசுங்கன்று

உங்களைத் தாக்குபவர்களுக்கெதிராக நீங்கள் கடவுள்-ன் பாதையில் சண்டை யிடலாம், ஆனால் வலுச்சண்டைக்கு செல்லாதீர்கள். வலுச்சண்டையிடுபவர்களைக் கடவுள் நேசிப்பதில்லை.

[2:189] நிலவின் நிலைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள், “அவை மக்களுக்கு காலங் காட்டும் கருவியாகவும், ஹஜ்ஜின் காலத்தை நிர்ணயிப்பதாகவும் விளங்குகின்றது” என்று கூறுவீராக. சுற்றி வளைத்து பேசுவது நன்னெறி யன்று*, நன்னெறி கட்டளைகளை உறுதியாகக் கடைபிடிப்பதன் மூலம் மற்றும் வெளிப்படையாக இருப்பதன் மூலம் அடையப்படுகின்றது. நீங்கள் கடவுள்-ஐ கருத்தில் கொள்ள வேண்டும், அதன் மூலம் நீங்கள் வெற்றி பெறலாம்.

[2:191] உங்களுக்கெதிராக யுத்தம் புரிவோரை நீங்கள் கொல்லலாம், இன்னும் உங்களை அவர்கள் வெளியேற்றிய அவ்விடத்திலிருந்து அவர் களை நீங்கள் வெளியேற்றலாம். அடக்கு முறை செய்வது கொலையைவிட மோசமானது. புனித மஸ்ஜிதின் அருகில் அவர்கள் உங்களைத் தாக்கினால் தவிர அவர்களிடம் அங்கே சண்டையிடாதீர்கள். அவர்கள் உங்களைத் தாக்கினால், நீங்கள் அவர்களைக் கொல்லலாம். இதுதான் நம்ப மறுப்பவர்களுக்கு சரியான தண்டனையாகும்.