குர்ஆன் 2:189 — பசுங்கன்று
நிலவின் நிலைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள், “அவை மக்களுக்கு காலங் காட்டும் கருவியாகவும், ஹஜ்ஜின் காலத்தை நிர்ணயிப்பதாகவும் விளங்குகின்றது” என்று கூறுவீராக. சுற்றி வளைத்து பேசுவது நன்னெறி யன்று*, நன்னெறி கட்டளைகளை உறுதியாகக் கடைபிடிப்பதன் மூலம் மற்றும் வெளிப்படையாக இருப்பதன் மூலம் அடையப்படுகின்றது. நீங்கள் கடவுள்-ஐ கருத்தில் கொள்ள வேண்டும், அதன் மூலம் நீங்கள் வெற்றி பெறலாம்.
[2:188] நீங்கள் தெரிந்தே மற்றவர்களுடைய செல்வத் தை சட்ட விரோதமான முறையில் எடுத்துக் கொள்ளவோ, அன்றி மற்றவர்களின் சில உரிமைகளை சட்ட விரோதமாக அபகரிக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் தரவோ கூடாது.
[2:190] உங்களைத் தாக்குபவர்களுக்கெதிராக நீங்கள் கடவுள்-ன் பாதையில் சண்டை யிடலாம், ஆனால் வலுச்சண்டைக்கு செல்லாதீர்கள். வலுச்சண்டையிடுபவர்களைக் கடவுள் நேசிப்பதில்லை.