குர்ஆன் 2:188 — பசுங்கன்று
وَلا تَأكُلوا أَموٰلَكُم بَينَكُم بِالبٰطِلِ وَتُدلوا بِها إِلَى الحُكّامِ لِتَأكُلوا فَريقًا مِن أَموٰلِ النّاسِ بِالإِثمِ وَأَنتُم تَعلَمونَ
நீங்கள் தெரிந்தே மற்றவர்களுடைய செல்வத் தை சட்ட விரோதமான முறையில் எடுத்துக் கொள்ளவோ, அன்றி மற்றவர்களின் சில உரிமைகளை சட்ட விரோதமாக அபகரிக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் தரவோ கூடாது.
[2:187] நோன்பு கால இரவுகளின் போது உங்கள் மனைவியருடன் தாம்பத்ய உறவு கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்படுகின்றது. அவர் கள் உங்களின் இரகசியங்களைப் பேணிக்காப் பவர்கள், நீங்கள் அவர்களின் இரகசியங்களை பேணிக்காப்பவர்கள். நீங்கள் உங்களின் ஆன்மாக்களுக்கு துரோகமிழைத்துக் கொண்டிருந்தீர்கள் என்பதைக் கடவுள் அறிந்திருந்தார், மேலும் அவர் உங்களை மீட்டுக் கொண்டார், மேலும் உங்களைப் பிழை பொறுத்துக் கொண்டார். இனிமேல் கடவுள் உங்களுக்கு அனுமதித்ததைத் தேடியவர்களாக, நீங்கள் அவர்களுடன் தாம்பத்ய உறவு கொள்ளலாம். அதிகாலை வெளிச்சத்தின் வெள்ளை நூல், இரவின் கருப்பு நூலிலிருந்து தனியாகத் தெரியும் வரை நீங்கள் உண்ணலாம், பருகலாம். அதன்பின் சூரிய அஸ்தமனம் வரை நீங்கள் நோன்பிருக்க வேண்டும். நீங்கள் (ரமலானின் கடைசிப் பத்து நாட்களில்) மஸ்ஜிதில் தங்கி இருக்கத் தீர்மானித்தால் தாம்பத்ய உறவு தடை செய்யப்படுகின்றது. இவை கடவுள்-ன் சட்டங்கள், அவற்றை நீங்கள் மீறக்கூடாது. கடவுள் தன் வெளிப்பாடுகளை மக்களுக்கு அவர்கள் ஆன்மா மீட்சியடையும் பொருட்டு இவ்வாறு தெளிவுபடுத்துகின்றார்.
[2:189] நிலவின் நிலைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள், “அவை மக்களுக்கு காலங் காட்டும் கருவியாகவும், ஹஜ்ஜின் காலத்தை நிர்ணயிப்பதாகவும் விளங்குகின்றது” என்று கூறுவீராக. சுற்றி வளைத்து பேசுவது நன்னெறி யன்று*, நன்னெறி கட்டளைகளை உறுதியாகக் கடைபிடிப்பதன் மூலம் மற்றும் வெளிப்படையாக இருப்பதன் மூலம் அடையப்படுகின்றது. நீங்கள் கடவுள்-ஐ கருத்தில் கொள்ள வேண்டும், அதன் மூலம் நீங்கள் வெற்றி பெறலாம்.