Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:187 — பசுங்கன்று

أُحِلَّ لَكُم لَيلَةَ الصِّيامِ الرَّفَثُ إِلىٰ نِسائِكُم ۚ هُنَّ لِباسٌ لَكُم وَأَنتُم لِباسٌ لَهُنَّ ۗ عَلِمَ اللَّهُ أَنَّكُم كُنتُم تَختانونَ أَنفُسَكُم فَتابَ عَلَيكُم وَعَفا عَنكُم ۖ فَالـٰٔنَ بٰشِروهُنَّ وَابتَغوا ما كَتَبَ اللَّهُ لَكُم ۚ وَكُلوا وَاشرَبوا حَتّىٰ يَتَبَيَّنَ لَكُمُ الخَيطُ الأَبيَضُ مِنَ الخَيطِ الأَسوَدِ مِنَ الفَجرِ ۖ ثُمَّ أَتِمُّوا الصِّيامَ إِلَى الَّيلِ ۚ وَلا تُبٰشِروهُنَّ وَأَنتُم عٰكِفونَ فِى المَسٰجِدِ ۗ تِلكَ حُدودُ اللَّهِ فَلا تَقرَبوها ۗ كَذٰلِكَ يُبَيِّنُ اللَّهُ ءايٰتِهِ لِلنّاسِ لَعَلَّهُم يَتَّقونَ

நோன்பு கால இரவுகளின் போது உங்கள் மனைவியருடன் தாம்பத்ய உறவு கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்படுகின்றது. அவர் கள் உங்களின் இரகசியங்களைப் பேணிக்காப் பவர்கள், நீங்கள் அவர்களின் இரகசியங்களை பேணிக்காப்பவர்கள். நீங்கள் உங்களின் ஆன்மாக்களுக்கு துரோகமிழைத்துக் கொண்டிருந்தீர்கள் என்பதைக் கடவுள் அறிந்திருந்தார், மேலும் அவர் உங்களை மீட்டுக் கொண்டார், மேலும் உங்களைப் பிழை பொறுத்துக் கொண்டார். இனிமேல் கடவுள் உங்களுக்கு அனுமதித்ததைத் தேடியவர்களாக, நீங்கள் அவர்களுடன் தாம்பத்ய உறவு கொள்ளலாம். அதிகாலை வெளிச்சத்தின் வெள்ளை நூல், இரவின் கருப்பு நூலிலிருந்து தனியாகத் தெரியும் வரை நீங்கள் உண்ணலாம், பருகலாம். அதன்பின் சூரிய அஸ்தமனம் வரை நீங்கள் நோன்பிருக்க வேண்டும். நீங்கள் (ரமலானின் கடைசிப் பத்து நாட்களில்) மஸ்ஜிதில் தங்கி இருக்கத் தீர்மானித்தால் தாம்பத்ய உறவு தடை செய்யப்படுகின்றது. இவை கடவுள்-ன் சட்டங்கள், அவற்றை நீங்கள் மீறக்கூடாது. கடவுள் தன் வெளிப்பாடுகளை மக்களுக்கு அவர்கள் ஆன்மா மீட்சியடையும் பொருட்டு இவ்வாறு தெளிவுபடுத்துகின்றார்.

[2:186] என் அடியார்கள் உம்மிடம் என்னைப்பற்றிக் கேட்கும் போது, நான் எப்பொழுதும் அருகிலேயே உள்ளேன். அவர்கள் என்னிடம் பிரார்த்திக்கும் போது, நான் அவர்களின் பிரார்த்தனைகளுக்கு பதில் அளிக்கின்றேன். வழிகாட்டல் பெறும் பொருட்டு மக்கள் எனக்கு பதில் அளிக்க வேண்டும். மேலும் என் மேல் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

[2:188] நீங்கள் தெரிந்தே மற்றவர்களுடைய செல்வத் தை சட்ட விரோதமான முறையில் எடுத்துக் கொள்ளவோ, அன்றி மற்றவர்களின் சில உரிமைகளை சட்ட விரோதமாக அபகரிக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் தரவோ கூடாது.