குர்ஆன் 2:186 — பசுங்கன்று
என் அடியார்கள் உம்மிடம் என்னைப்பற்றிக் கேட்கும் போது, நான் எப்பொழுதும் அருகிலேயே உள்ளேன். அவர்கள் என்னிடம் பிரார்த்திக்கும் போது, நான் அவர்களின் பிரார்த்தனைகளுக்கு பதில் அளிக்கின்றேன். வழிகாட்டல் பெறும் பொருட்டு மக்கள் எனக்கு பதில் அளிக்க வேண்டும். மேலும் என் மேல் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
[2:185] ரமலான் மாதம், அதில்தான் மக்களுக்கு வழிகாட்டல் வழங்குகின்றதாகவும், தெளிவான படிப் பினைகள் கொண்டதாகவும் மற்றும் சட்டப் புத்தகமாகவும் குர்ஆன் வெளிப்படுத்தப்பட்டது. உங்களில் இம்மாதத்தைக் காண்கின்றவர்கள், அதிலே நோன்பிருக்க வேண்டும். நோயிலோ அல்லது பிரயாணத்திலோ இருப்பவர்கள் அதே எண்ணிக்கையுள்ள மற்ற நாட்களைக் கொண்டு பகரமாக்கிக் கொள்ளலாம். நீங்கள் உங்கள் கடமைகளை நிறைவேற்றவும், மேலும் உங்களை வழிநடத்திக் கொண்டிருப்பதற்காக கடவுள்-ஐத் துதிக்கவும் மேலும் உங்களுடைய நன்றியுணர்வை வெளிக்காட்டவும், கடவுள் உங்களுக்கு விரும் புவது சுலபத்தையே அன்றி கஷ்டத்தை அல்ல.
[2:187] நோன்பு கால இரவுகளின் போது உங்கள் மனைவியருடன் தாம்பத்ய உறவு கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்படுகின்றது. அவர் கள் உங்களின் இரகசியங்களைப் பேணிக்காப் பவர்கள், நீங்கள் அவர்களின் இரகசியங்களை பேணிக்காப்பவர்கள். நீங்கள் உங்களின் ஆன்மாக்களுக்கு துரோகமிழைத்துக் கொண்டிருந்தீர்கள் என்பதைக் கடவுள் அறிந்திருந்தார், மேலும் அவர் உங்களை மீட்டுக் கொண்டார், மேலும் உங்களைப் பிழை பொறுத்துக் கொண்டார். இனிமேல் கடவுள் உங்களுக்கு அனுமதித்ததைத் தேடியவர்களாக, நீங்கள் அவர்களுடன் தாம்பத்ய உறவு கொள்ளலாம். அதிகாலை வெளிச்சத்தின் வெள்ளை நூல், இரவின் கருப்பு நூலிலிருந்து தனியாகத் தெரியும் வரை நீங்கள் உண்ணலாம், பருகலாம். அதன்பின் சூரிய அஸ்தமனம் வரை நீங்கள் நோன்பிருக்க வேண்டும். நீங்கள் (ரமலானின் கடைசிப் பத்து நாட்களில்) மஸ்ஜிதில் தங்கி இருக்கத் தீர்மானித்தால் தாம்பத்ய உறவு தடை செய்யப்படுகின்றது. இவை கடவுள்-ன் சட்டங்கள், அவற்றை நீங்கள் மீறக்கூடாது. கடவுள் தன் வெளிப்பாடுகளை மக்களுக்கு அவர்கள் ஆன்மா மீட்சியடையும் பொருட்டு இவ்வாறு தெளிவுபடுத்துகின்றார்.