Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:185 — பசுங்கன்று

ரமலான் மாதம், அதில்தான் மக்களுக்கு வழிகாட்டல் வழங்குகின்றதாகவும், தெளிவான படிப் பினைகள் கொண்டதாகவும் மற்றும் சட்டப் புத்தகமாகவும் குர்ஆன் வெளிப்படுத்தப்பட்டது. உங்களில் இம்மாதத்தைக் காண்கின்றவர்கள், அதிலே நோன்பிருக்க வேண்டும். நோயிலோ அல்லது பிரயாணத்திலோ இருப்பவர்கள் அதே எண்ணிக்கையுள்ள மற்ற நாட்களைக் கொண்டு பகரமாக்கிக் கொள்ளலாம். நீங்கள் உங்கள் கடமைகளை நிறைவேற்றவும், மேலும் உங்களை வழிநடத்திக் கொண்டிருப்பதற்காக கடவுள்-ஐத் துதிக்கவும் மேலும் உங்களுடைய நன்றியுணர்வை வெளிக்காட்டவும், கடவுள் உங்களுக்கு விரும் புவது சுலபத்தையே அன்றி கஷ்டத்தை அல்ல.

[2:184] குறிப்பிட்ட நாட்கள் (நோன்பிருத்தலுக்கென நியமிக்கப்பட்டுள்ளது); ஒருவர் நோயிலோ, பிரயாணத்திலோ இருந்தால், ஒரு சமமான எண்ணிக்கையுள்ள மற்ற நாட்களைக் கொண்டு பகரமாக்கி கொள்ளலாம். நோன்பி ருக்க முடிந்தவர்களாயினும், மிகுந்த கஷ்டப் படுவார்கள் என்றால், நோன்பை முறிக்கும் ஒவ்வொரு நாளைக்கும் ஒரு ஏழை நபருக்கு உணவளிப்பது கொண்டு பகரமாக்கலாம். ஒருவர் (அதிக நன்னெறியான காரியங்களில்) தாமாக முன்வந்தால், அது சிறப்பே ஆகும். ஆயினும் நீங்கள் அறிவீர்களாயின் நோன்பிருத் தலே உங்களுக்கு மிகவும் சிறந்தது.

[2:186] என் அடியார்கள் உம்மிடம் என்னைப்பற்றிக் கேட்கும் போது, நான் எப்பொழுதும் அருகிலேயே உள்ளேன். அவர்கள் என்னிடம் பிரார்த்திக்கும் போது, நான் அவர்களின் பிரார்த்தனைகளுக்கு பதில் அளிக்கின்றேன். வழிகாட்டல் பெறும் பொருட்டு மக்கள் எனக்கு பதில் அளிக்க வேண்டும். மேலும் என் மேல் நம்பிக்கை கொள்ள வேண்டும்.