Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:197 — பசுங்கன்று

الحَجُّ أَشهُرٌ مَعلومٰتٌ ۚ فَمَن فَرَضَ فيهِنَّ الحَجَّ فَلا رَفَثَ وَلا فُسوقَ وَلا جِدالَ فِى الحَجِّ ۗ وَما تَفعَلوا مِن خَيرٍ يَعلَمهُ اللَّهُ ۗ وَتَزَوَّدوا فَإِنَّ خَيرَ الزّادِ التَّقوىٰ ۚ وَاتَّقونِ يٰأُولِى الأَلبٰبِ

குறிப்பிடப்பட்ட மாதங்களில் ஹஜ் * கடைப் பிடிக்கப்பட வேண்டும். ஹஜ்ஜை கடைப்பிடிக்க பயணத்தைத் துவங்குபவர்கள், தாம்பத்ய உறவு, தவறான நடத்தை, மற்றும் வாக்கு வாதங்கள் இவற்றிலிருந்து ஹஜ் பயணம் முழுவதும் விலகியிருக்க வேண்டும். எந்த நல்லதை நீங்கள் செய்தாலும், கடவுள் அதனை முற்றிலும் அறிந்தவர். பிரயாணத்திற் காக தேவையான பொருட்களை நீங்கள் தயார் செய்யும் நிலையில் மிகச்சிறந்த பொருள் நன்னெறியே ஆகும். அறிவுத்திறன் கொண்டோரே நீங்கள் என்னைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

[2:196] நீங்கள் ஹஜ் மற்றும் உம்ராவின் அனைத்துச் சடங்குகளையும் கடவுள்-க்காக கடைப்பிடிக்க வேண்டும். நீங்கள் தடுக்கப்பட்டால், நீங்கள் ஓர் அர்ப்பணப்பொருளை அனுப்பி வைக்க வேண்டும், மேலும் உங்களுடைய அர்ப்பணப்பொருள் அது சேருமிடத்தை அடைவது வரை, உங்கள் முடியை வெட்டுவதைத் தொடராதீர்கள். நீங்கள் நோயில் இருந்தாலோ, அல்லது தலைக்காயத்தால் அவதியுற்றாலோ (நீங்கள் உங்கள் முடியை வெட்ட வேண்டி இருந்தால்) நோன்பிருத்தல், அல்லது தர்மம் வழங்குதல், அல்லது ஏதேனும் வேறு வழிபாட்டு முறையால் நீங்கள் பரிகாரம் செய்ய வேண்டும். சகஜமான ஹஜ்ஜின் காலத்தின் போது, ஹஜ் மற்றும் உம்ராவுக் கிடையில் நீங்கள் இஹ்ராம் எனும் (புனித) நிலையை முறித்தால் ஒரு பிராணியைப் பலியிட்டு அர்ப்பணம் செய்வது கொண்டு நீங்கள் பரிகாரம் தேட வேண்டும். உங்களால் அதற்குச் செலவு செய்ய இயலாவிட்டால், நீங்கள் புனித மஸ்ஜிதிற்கு அருகில் வசிக்காத பட்சத்தில், ஹஜ்ஜின் போது மூன்று நாட்கள், இன்னும் வீடு திரும்பும் போது ஏழு என-இதை பத்தாக பூர்த்தி செய்து-நீங்கள் நோன்பிருக்க வேண்டும். நீங்கள் கடவுள்-ஐக் கவனத்தில் கொள்ள வேண்டும், இன்னும் தெரிந்து கொள்ளுங்கள் கடவுள் தண்டனையை நிறைவேற்றுவதில் கண்டிப்பானவர்.

[2:198] (வணிகத்தின் வாயிலாக) உங்கள் இரட்சகரிட மிருந்து வாழ்வாதாரங்களை தேடுவதால் நீங்கள் எந்தத் தவறும் செய்து விடவில்லை. அரஃபாத்திலிருந்து நீங்கள் அணிவகுக்கும் போது, புனிதஸ்தலம் (முஸ்தலிபா) அருகில் கடவுள்-ஐ நீங்கள் நினைவில் கொண்டு போற்ற வேண்டும். உங்களை வழிநடத்திக் கொண்டிருப்பதற்காக நீங்கள் அவரை நினைத்துப் போற்ற வேண்டும். இதற்குமுன்பு நீங்கள் வழிதவறிப் போயிருந்தீர்கள்.