Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:198 — பசுங்கன்று

(வணிகத்தின் வாயிலாக) உங்கள் இரட்சகரிட மிருந்து வாழ்வாதாரங்களை தேடுவதால் நீங்கள் எந்தத் தவறும் செய்து விடவில்லை. அரஃபாத்திலிருந்து நீங்கள் அணிவகுக்கும் போது, புனிதஸ்தலம் (முஸ்தலிபா) அருகில் கடவுள்-ஐ நீங்கள் நினைவில் கொண்டு போற்ற வேண்டும். உங்களை வழிநடத்திக் கொண்டிருப்பதற்காக நீங்கள் அவரை நினைத்துப் போற்ற வேண்டும். இதற்குமுன்பு நீங்கள் வழிதவறிப் போயிருந்தீர்கள்.

[2:197] குறிப்பிடப்பட்ட மாதங்களில் ஹஜ் * கடைப் பிடிக்கப்பட வேண்டும். ஹஜ்ஜை கடைப்பிடிக்க பயணத்தைத் துவங்குபவர்கள், தாம்பத்ய உறவு, தவறான நடத்தை, மற்றும் வாக்கு வாதங்கள் இவற்றிலிருந்து ஹஜ் பயணம் முழுவதும் விலகியிருக்க வேண்டும். எந்த நல்லதை நீங்கள் செய்தாலும், கடவுள் அதனை முற்றிலும் அறிந்தவர். பிரயாணத்திற் காக தேவையான பொருட்களை நீங்கள் தயார் செய்யும் நிலையில் மிகச்சிறந்த பொருள் நன்னெறியே ஆகும். அறிவுத்திறன் கொண்டோரே நீங்கள் என்னைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

[2:199] அணிவகுக்கும் மற்ற மக்களுடன் சேர்ந்து நீங்கள் அணிவகுக்க வேண்டும் மேலும் கடவுள்-இடம் பாவ மன்னிப்புக் கேட்க வேண்டும். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.