குர்ஆன் 2:199 — பசுங்கன்று
அணிவகுக்கும் மற்ற மக்களுடன் சேர்ந்து நீங்கள் அணிவகுக்க வேண்டும் மேலும் கடவுள்-இடம் பாவ மன்னிப்புக் கேட்க வேண்டும். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[2:198] (வணிகத்தின் வாயிலாக) உங்கள் இரட்சகரிட மிருந்து வாழ்வாதாரங்களை தேடுவதால் நீங்கள் எந்தத் தவறும் செய்து விடவில்லை. அரஃபாத்திலிருந்து நீங்கள் அணிவகுக்கும் போது, புனிதஸ்தலம் (முஸ்தலிபா) அருகில் கடவுள்-ஐ நீங்கள் நினைவில் கொண்டு போற்ற வேண்டும். உங்களை வழிநடத்திக் கொண்டிருப்பதற்காக நீங்கள் அவரை நினைத்துப் போற்ற வேண்டும். இதற்குமுன்பு நீங்கள் வழிதவறிப் போயிருந்தீர்கள்.
[2:200] உங்கள் சடங்குகளை நீங்கள் பூர்த்தி செய்த வுடன், உங்கள் சொந்த பெற்றோரை நீங்கள் நினைவு கூர்வது போன்று அல்லது அதைவிட இன்னும் அதிகமாக கடவுள்-ஐ தொடர்ந்து நினைவு கூருதல் வேண்டும். மறுவுலகில் எந்த பங்கும் இல்லாத நிலையில் மக்கள் சிலர் “எங்கள் இரட்சகரே, இவ்வுலகிலேயே எங்களுக்குக் கொடுங்கள்” என்று கூறுவார்கள்.