குர்ஆன் 2:196 — பசுங்கன்று
நீங்கள் ஹஜ் மற்றும் உம்ராவின் அனைத்துச் சடங்குகளையும் கடவுள்-க்காக கடைப்பிடிக்க வேண்டும். நீங்கள் தடுக்கப்பட்டால், நீங்கள் ஓர் அர்ப்பணப்பொருளை அனுப்பி வைக்க வேண்டும், மேலும் உங்களுடைய அர்ப்பணப்பொருள் அது சேருமிடத்தை அடைவது வரை, உங்கள் முடியை வெட்டுவதைத் தொடராதீர்கள். நீங்கள் நோயில் இருந்தாலோ, அல்லது தலைக்காயத்தால் அவதியுற்றாலோ (நீங்கள் உங்கள் முடியை வெட்ட வேண்டி இருந்தால்) நோன்பிருத்தல், அல்லது தர்மம் வழங்குதல், அல்லது ஏதேனும் வேறு வழிபாட்டு முறையால் நீங்கள் பரிகாரம் செய்ய வேண்டும். சகஜமான ஹஜ்ஜின் காலத்தின் போது, ஹஜ் மற்றும் உம்ராவுக் கிடையில் நீங்கள் இஹ்ராம் எனும் (புனித) நிலையை முறித்தால் ஒரு பிராணியைப் பலியிட்டு அர்ப்பணம் செய்வது கொண்டு நீங்கள் பரிகாரம் தேட வேண்டும். உங்களால் அதற்குச் செலவு செய்ய இயலாவிட்டால், நீங்கள் புனித மஸ்ஜிதிற்கு அருகில் வசிக்காத பட்சத்தில், ஹஜ்ஜின் போது மூன்று நாட்கள், இன்னும் வீடு திரும்பும் போது ஏழு என-இதை பத்தாக பூர்த்தி செய்து-நீங்கள் நோன்பிருக்க வேண்டும். நீங்கள் கடவுள்-ஐக் கவனத்தில் கொள்ள வேண்டும், இன்னும் தெரிந்து கொள்ளுங்கள் கடவுள் தண்டனையை நிறைவேற்றுவதில் கண்டிப்பானவர்.
[2:195] நீங்கள் கடவுள்-ன் பாதையில் செலவிட வேண்டும்; உங்கள் சொந்தகரங்களாலேயே உங்களை அழிவில் எறிந்துவிடாதீர்கள். நீங்கள் தர்மம் செய்பவர்களாக இருக்க வேண்டும்; கடவுள் தர்மம் செய்பவர்களை நேசிக்கின்றார்.
[2:197] குறிப்பிடப்பட்ட மாதங்களில் ஹஜ் * கடைப் பிடிக்கப்பட வேண்டும். ஹஜ்ஜை கடைப்பிடிக்க பயணத்தைத் துவங்குபவர்கள், தாம்பத்ய உறவு, தவறான நடத்தை, மற்றும் வாக்கு வாதங்கள் இவற்றிலிருந்து ஹஜ் பயணம் முழுவதும் விலகியிருக்க வேண்டும். எந்த நல்லதை நீங்கள் செய்தாலும், கடவுள் அதனை முற்றிலும் அறிந்தவர். பிரயாணத்திற் காக தேவையான பொருட்களை நீங்கள் தயார் செய்யும் நிலையில் மிகச்சிறந்த பொருள் நன்னெறியே ஆகும். அறிவுத்திறன் கொண்டோரே நீங்கள் என்னைக் கருத்தில் கொள்ள வேண்டும்.