Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:201 — பசுங்கன்று

மற்றுமுள்ளோர் “எங்கள் இரட்சகரே, இவ்வுலகில் நன்னெறியையும் மற்றும் மறுவுலகில் நன்னெறியையும் எங்களுக்குத் தாருங்கள், மேலும் நரகின் வேதனையிலிருந்து எங்களைக் காத்திடுங்கள்” என்று கூறுவார்கள்.

[2:200] உங்கள் சடங்குகளை நீங்கள் பூர்த்தி செய்த வுடன், உங்கள் சொந்த பெற்றோரை நீங்கள் நினைவு கூர்வது போன்று அல்லது அதைவிட இன்னும் அதிகமாக கடவுள்-ஐ தொடர்ந்து நினைவு கூருதல் வேண்டும். மறுவுலகில் எந்த பங்கும் இல்லாத நிலையில் மக்கள் சிலர் “எங்கள் இரட்சகரே, இவ்வுலகிலேயே எங்களுக்குக் கொடுங்கள்” என்று கூறுவார்கள்.

[2:202] இவர்களில் ஒவ்வொருவரும் தாங்கள் சம்பாதித்த பங்கைப் பெறுவர். கடவுள் கணக்கிடுவதில் மிகத்திறன் வாய்ந்தவர்.