Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:203 — பசுங்கன்று

(மினாவில்) சில எண்ணிக்கையிலான நாட்கள் நீங்கள் கடவுள்-ஐ நினைவுகூர வேண்டும். இதை எவரேனும் விரைவாக இரண்டு நாட் களில் செய்தாலும் அவர் பாவம் செய்தவராக மாட்டார், மேலும் நன்னெறியில் நிலைத்து இருக்கும் வரையில் எவரேனும் அதிகமாக தங்கினாலும் அவர் மீது குற்றமில்லை. நீங்கள் கடவுள்-ஐ கவனத்தில் கொள்ளுங்கள், மேலும் நீங்கள் அவர் முன்னால் ஒன்று திரட்டப் படுவீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

[2:202] இவர்களில் ஒவ்வொருவரும் தாங்கள் சம்பாதித்த பங்கைப் பெறுவர். கடவுள் கணக்கிடுவதில் மிகத்திறன் வாய்ந்தவர்.

[2:204] மக்களிடையே ஒருவன், இவ்வுலக வாழ்க்கை யைப் பற்றிய தன் கூற்றுக்களால் உங்களை கவரக்கூடும், மேலும் அவன் மிகவும் கடுமை யான எதிரியாக இருக்கக்கூடிய அதே சமயம், தன் ஆழ்மனதின் எண்ணங்களுக்கு கடவுள் -ஐயே கூட சாட்சியாக அழைக்கக்கூடும்.