Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:217 — பசுங்கன்று

புனித மாதங்களைப் பற்றியும், அவற்றில் சண்டையிடுவது பற்றியும் அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள்: “அவற்றில் சண்டையிடுவது அதன் புனிதத்தை அவமதிப்பதாகும். ஆயினும் கடவுள்-ன் பாதையை விட்டு தடுப்பதும் மேலும் அவரையும், புனித மஸ்ஜிதின் புனிதத்தையும் நம்ப மறுப்பதும் மேலும் அதன் மக்களை வெளியேற்றுவதும், கடவுள்-ன் பார்வையில் அதைவிடப் பெரும் பாவச் செயலாகும். அடக்குமுறை கொலையை விட மோசமானதாகும்,” என்று கூறுவீராக. அவர்களால் முடியுமேயானால் உங்களை, உங்கள் மார்க்கத்தை விட்டு திருப்புவதற்காக எப்போதும் சண்டையிடுவார்கள். உங்களுக் கிடையில் தங்கள் மார்க்கத்தை விட்டும் திரும்பியவர்களாகவும், மேலும் நம்பமறுத்தவர் களாகவும் இறந்துவிடுபவர்கள், இந்த வாழ்விலும் மேலும் மறுவுலகிலும் தங்கள் செயல்களை பயனற்றதாக்கி கொண்டவர்கள் ஆவார்கள். இவர்கள் நரகவாசிகளாவார்கள், அதில் அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள்.

[2:216] நீங்கள் விரும்பாத போதும் சண்டையிடுவது உங்கள் மீது சுமத்தப்படலாம். ஆனால் உங்களு க்கு நன்மையான சிலவற்றை நீங்கள் வெறுக்கக் கூடும். மேலும் உங்களுக்கு தீமையான சிலவற்றை நீங்கள் விரும்பக் கூடும். நீங்கள் அறியாத பொழுதும் கடவுள் அறிவார்.

[2:218] எவர்கள் நம்பிக்கை கொண்டு, மேலும் எவர்கள் ஊரைவிட்டு வெளியேறி கடவுள்-க்காக பாடுபடுகின்றார்களோ அவர்கள் கடவுள்-ன் கருணைக்கு தகுதியடைந்து விட்டார்கள். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.