குர்ஆன் 2:218 — பசுங்கன்று
எவர்கள் நம்பிக்கை கொண்டு, மேலும் எவர்கள் ஊரைவிட்டு வெளியேறி கடவுள்-க்காக பாடுபடுகின்றார்களோ அவர்கள் கடவுள்-ன் கருணைக்கு தகுதியடைந்து விட்டார்கள். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[2:217] புனித மாதங்களைப் பற்றியும், அவற்றில் சண்டையிடுவது பற்றியும் அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள்: “அவற்றில் சண்டையிடுவது அதன் புனிதத்தை அவமதிப்பதாகும். ஆயினும் கடவுள்-ன் பாதையை விட்டு தடுப்பதும் மேலும் அவரையும், புனித மஸ்ஜிதின் புனிதத்தையும் நம்ப மறுப்பதும் மேலும் அதன் மக்களை வெளியேற்றுவதும், கடவுள்-ன் பார்வையில் அதைவிடப் பெரும் பாவச் செயலாகும். அடக்குமுறை கொலையை விட மோசமானதாகும்,” என்று கூறுவீராக. அவர்களால் முடியுமேயானால் உங்களை, உங்கள் மார்க்கத்தை விட்டு திருப்புவதற்காக எப்போதும் சண்டையிடுவார்கள். உங்களுக் கிடையில் தங்கள் மார்க்கத்தை விட்டும் திரும்பியவர்களாகவும், மேலும் நம்பமறுத்தவர் களாகவும் இறந்துவிடுபவர்கள், இந்த வாழ்விலும் மேலும் மறுவுலகிலும் தங்கள் செயல்களை பயனற்றதாக்கி கொண்டவர்கள் ஆவார்கள். இவர்கள் நரகவாசிகளாவார்கள், அதில் அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள்.
[2:219] அவர்கள் போதை ஊட்டக் கூடிய பொருட்கள் மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றார் கள்; “அவற்றில் ஒரு பெரும் பாவமும், மேலும் மக்களுக்கு சில பயன்களும் உள்ளது. ஆனால் அவற்றில் உள்ள பயன்களை விடவும் பாவம் அதிக கனமானதாகும்” என்று கூறுவீராக. இன்னும் எவற்றை தர்மம் செய்வது என்றும் அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள்; “தேவைக்கு மேல் மிஞ்சி இருப்பதை”, என்று கூறுவீராக. நீங்கள் சிந்திக்கும் பொருட்டு, கடவுள் இவ்வாறு தன் வெளிப்பாடுகளை உங்களுக்கு தெளிவுபடுத்துகின்றார்,