குர்ஆன் 2:219 — பசுங்கன்று
அவர்கள் போதை ஊட்டக் கூடிய பொருட்கள் மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றார் கள்; “அவற்றில் ஒரு பெரும் பாவமும், மேலும் மக்களுக்கு சில பயன்களும் உள்ளது. ஆனால் அவற்றில் உள்ள பயன்களை விடவும் பாவம் அதிக கனமானதாகும்” என்று கூறுவீராக. இன்னும் எவற்றை தர்மம் செய்வது என்றும் அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள்; “தேவைக்கு மேல் மிஞ்சி இருப்பதை”, என்று கூறுவீராக. நீங்கள் சிந்திக்கும் பொருட்டு, கடவுள் இவ்வாறு தன் வெளிப்பாடுகளை உங்களுக்கு தெளிவுபடுத்துகின்றார்,
[2:218] எவர்கள் நம்பிக்கை கொண்டு, மேலும் எவர்கள் ஊரைவிட்டு வெளியேறி கடவுள்-க்காக பாடுபடுகின்றார்களோ அவர்கள் கடவுள்-ன் கருணைக்கு தகுதியடைந்து விட்டார்கள். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[2:220] இந்த வாழ்வையும் மேலும் மறுவுலகையும் குறித்து. மேலும் அவர்கள் அநாதைகளைப் பற்றியும் உம்மிடம் கேட்கின்றார்கள்: நன்னெறியான நபர்களாக அவர்களை வளர்ப்பதே அவர்களுக்கு நீங்கள் செய்யக்கூடியவற்றில் மிகச் சிறந்ததாகும். அவர்களுடைய சொத்துக்களை உங்களுடைய துடன் நீங்கள் கலந்துவிட்டால் அவர்களை நீங்கள் உங்கள் குடும்ப அங்கத்தினர்கள் போல் நடத்த வேண்டும்” என்று கூறுவீராக. கடவுள் நன்னெறியாளர்களையும், மேலும தீயவர் களையும் அறிகின்றார். கடவுள் நாடியிருந்தால் உங்கள் மீது கடுமையான சட்டங்களை சுமத்தி இருக்க இயலும். கடவுள் சர்வ வல்லமை யுடையவர், ஞானம் மிக்கவர்.