Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:220 — பசுங்கன்று

இந்த வாழ்வையும் மேலும் மறுவுலகையும் குறித்து. மேலும் அவர்கள் அநாதைகளைப் பற்றியும் உம்மிடம் கேட்கின்றார்கள்: நன்னெறியான நபர்களாக அவர்களை வளர்ப்பதே அவர்களுக்கு நீங்கள் செய்யக்கூடியவற்றில் மிகச் சிறந்ததாகும். அவர்களுடைய சொத்துக்களை உங்களுடைய துடன் நீங்கள் கலந்துவிட்டால் அவர்களை நீங்கள் உங்கள் குடும்ப அங்கத்தினர்கள் போல் நடத்த வேண்டும்” என்று கூறுவீராக. கடவுள் நன்னெறியாளர்களையும், மேலும தீயவர் களையும் அறிகின்றார். கடவுள் நாடியிருந்தால் உங்கள் மீது கடுமையான சட்டங்களை சுமத்தி இருக்க இயலும். கடவுள் சர்வ வல்லமை யுடையவர், ஞானம் மிக்கவர்.

[2:219] அவர்கள் போதை ஊட்டக் கூடிய பொருட்கள் மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றார் கள்; “அவற்றில் ஒரு பெரும் பாவமும், மேலும் மக்களுக்கு சில பயன்களும் உள்ளது. ஆனால் அவற்றில் உள்ள பயன்களை விடவும் பாவம் அதிக கனமானதாகும்” என்று கூறுவீராக. இன்னும் எவற்றை தர்மம் செய்வது என்றும் அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள்; “தேவைக்கு மேல் மிஞ்சி இருப்பதை”, என்று கூறுவீராக. நீங்கள் சிந்திக்கும் பொருட்டு, கடவுள் இவ்வாறு தன் வெளிப்பாடுகளை உங்களுக்கு தெளிவுபடுத்துகின்றார்,

[2:221] இணைத்தெய்வ வழிபாடு செய்யும் பெண்களை அவர்கள் நம்பிக்கை கொண்டாலே தவிர நீங்கள் திருமணம் செய்யாதீர்கள்; நீங்கள் அவளை விரும்பினாலும், இணைத்தெய்வ வழிபாடு செய்யும் பெண்ணை விட நம்பிக்கை கொண்ட பெண் சிறந்தவளாவாள். அன்றியும் இணைத்தெய்வ வழிபாடு செய்யும் ஆண்களுக்கு அவர்கள் நம்பிக்கை கொண்டாலே தவிர உங்கள் மகள்களை திருமணம் செய்து கொடுக்க வேண்டாம். நீங்கள் அவனை விரும்பினாலும், ஒரு இணைத்தெய்வ வழிபாடு செய்யும் ஆணை விட ஒரு நம்பிக்கை கொண்ட ஆண் சிறந்தவனாவான். கடவுள் அவருடைய நாட்டப்படி சுவனத்திற்கும், பாவ மன்னிப்பிற்கும் அழைக்கின்ற அதே சமயம் இவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றார்கள். மக்கள் கவனத்தில் கொள்ளும் பொருட்டு அவர், அவருடைய வெளிப்பாடுகளை தெளிவுபடுத்துகின்றார்.