Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:221 — பசுங்கன்று

وَلا تَنكِحُوا المُشرِكٰتِ حَتّىٰ يُؤمِنَّ ۚ وَلَأَمَةٌ مُؤمِنَةٌ خَيرٌ مِن مُشرِكَةٍ وَلَو أَعجَبَتكُم ۗ وَلا تُنكِحُوا المُشرِكينَ حَتّىٰ يُؤمِنوا ۚ وَلَعَبدٌ مُؤمِنٌ خَيرٌ مِن مُشرِكٍ وَلَو أَعجَبَكُم ۗ أُولٰئِكَ يَدعونَ إِلَى النّارِ ۖ وَاللَّهُ يَدعوا إِلَى الجَنَّةِ وَالمَغفِرَةِ بِإِذنِهِ ۖ وَيُبَيِّنُ ءايٰتِهِ لِلنّاسِ لَعَلَّهُم يَتَذَكَّرونَ

இணைத்தெய்வ வழிபாடு செய்யும் பெண்களை அவர்கள் நம்பிக்கை கொண்டாலே தவிர நீங்கள் திருமணம் செய்யாதீர்கள்; நீங்கள் அவளை விரும்பினாலும், இணைத்தெய்வ வழிபாடு செய்யும் பெண்ணை விட நம்பிக்கை கொண்ட பெண் சிறந்தவளாவாள். அன்றியும் இணைத்தெய்வ வழிபாடு செய்யும் ஆண்களுக்கு அவர்கள் நம்பிக்கை கொண்டாலே தவிர உங்கள் மகள்களை திருமணம் செய்து கொடுக்க வேண்டாம். நீங்கள் அவனை விரும்பினாலும், ஒரு இணைத்தெய்வ வழிபாடு செய்யும் ஆணை விட ஒரு நம்பிக்கை கொண்ட ஆண் சிறந்தவனாவான். கடவுள் அவருடைய நாட்டப்படி சுவனத்திற்கும், பாவ மன்னிப்பிற்கும் அழைக்கின்ற அதே சமயம் இவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றார்கள். மக்கள் கவனத்தில் கொள்ளும் பொருட்டு அவர், அவருடைய வெளிப்பாடுகளை தெளிவுபடுத்துகின்றார்.

[2:220] இந்த வாழ்வையும் மேலும் மறுவுலகையும் குறித்து. மேலும் அவர்கள் அநாதைகளைப் பற்றியும் உம்மிடம் கேட்கின்றார்கள்: நன்னெறியான நபர்களாக அவர்களை வளர்ப்பதே அவர்களுக்கு நீங்கள் செய்யக்கூடியவற்றில் மிகச் சிறந்ததாகும். அவர்களுடைய சொத்துக்களை உங்களுடைய துடன் நீங்கள் கலந்துவிட்டால் அவர்களை நீங்கள் உங்கள் குடும்ப அங்கத்தினர்கள் போல் நடத்த வேண்டும்” என்று கூறுவீராக. கடவுள் நன்னெறியாளர்களையும், மேலும தீயவர் களையும் அறிகின்றார். கடவுள் நாடியிருந்தால் உங்கள் மீது கடுமையான சட்டங்களை சுமத்தி இருக்க இயலும். கடவுள் சர்வ வல்லமை யுடையவர், ஞானம் மிக்கவர்.

[2:222] மாதவிடாய் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின் றார்கள்; “அது உபாதையானது; மாதவிடாயின் போது பெண்களுடன் தாம்பத்ய உறவை தவிர்த்துக் கொள்ளுங்கள்; அதை விட்டு அவர்கள் நீங்கும் வரை அவர்களை நெருங்காதீர்கள். அதைவிட்டு அவர்கள் நீங்கியவுடன் கடவுள் அமைத்த முறையில் நீங்கள் அவர்களுடன் தாம்பத்ய உறவு கொள்ளலாம். வருந்தித்திருந்துபவர்களை கடவுள் நேசிக்கின்றார் மேலும் அவர் தூய்மையுடையோரை நேசிக்கின்றார்” என்று கூறுவீராக .