Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:222 — பசுங்கன்று

மாதவிடாய் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின் றார்கள்; “அது உபாதையானது; மாதவிடாயின் போது பெண்களுடன் தாம்பத்ய உறவை தவிர்த்துக் கொள்ளுங்கள்; அதை விட்டு அவர்கள் நீங்கும் வரை அவர்களை நெருங்காதீர்கள். அதைவிட்டு அவர்கள் நீங்கியவுடன் கடவுள் அமைத்த முறையில் நீங்கள் அவர்களுடன் தாம்பத்ய உறவு கொள்ளலாம். வருந்தித்திருந்துபவர்களை கடவுள் நேசிக்கின்றார் மேலும் அவர் தூய்மையுடையோரை நேசிக்கின்றார்” என்று கூறுவீராக .

[2:221] இணைத்தெய்வ வழிபாடு செய்யும் பெண்களை அவர்கள் நம்பிக்கை கொண்டாலே தவிர நீங்கள் திருமணம் செய்யாதீர்கள்; நீங்கள் அவளை விரும்பினாலும், இணைத்தெய்வ வழிபாடு செய்யும் பெண்ணை விட நம்பிக்கை கொண்ட பெண் சிறந்தவளாவாள். அன்றியும் இணைத்தெய்வ வழிபாடு செய்யும் ஆண்களுக்கு அவர்கள் நம்பிக்கை கொண்டாலே தவிர உங்கள் மகள்களை திருமணம் செய்து கொடுக்க வேண்டாம். நீங்கள் அவனை விரும்பினாலும், ஒரு இணைத்தெய்வ வழிபாடு செய்யும் ஆணை விட ஒரு நம்பிக்கை கொண்ட ஆண் சிறந்தவனாவான். கடவுள் அவருடைய நாட்டப்படி சுவனத்திற்கும், பாவ மன்னிப்பிற்கும் அழைக்கின்ற அதே சமயம் இவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றார்கள். மக்கள் கவனத்தில் கொள்ளும் பொருட்டு அவர், அவருடைய வெளிப்பாடுகளை தெளிவுபடுத்துகின்றார்.

[2:223] உங்களுடைய பெண்கள் உங்களுடைய வித்தைச் சுமப்பவர்கள். இவ்விதமாக, நீங்கள் நன்னெறியை கடைபிடித்துக் கொண்டிருக்கும் வரை, இச்சிறப்புரிமையை நீங்கள் விரும்பிய வாறு அனுபவிக்கலாம். நீங்கள் கடவுள்-ஐ கவனத்தில் கொள்ளுங்கள். மேலும் அவரை நீங்கள் சந்திப்பீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். நம்பிக்கைகொண்டோருக்கு நற்செய்தி அளியுங்கள்.