Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:216 — பசுங்கன்று

நீங்கள் விரும்பாத போதும் சண்டையிடுவது உங்கள் மீது சுமத்தப்படலாம். ஆனால் உங்களு க்கு நன்மையான சிலவற்றை நீங்கள் வெறுக்கக் கூடும். மேலும் உங்களுக்கு தீமையான சிலவற்றை நீங்கள் விரும்பக் கூடும். நீங்கள் அறியாத பொழுதும் கடவுள் அறிவார்.

[2:215] கொடுப்பதைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள்: “நீங்கள் கொடுக்க கூடிய தர்மம், பெற்றோர்களுக்கும் உறவினர் களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும் மற்றும் வழிப்போக்கர்களுக்கும் சென்றடைய வேண்டும்” என்று கூறுவீராக. எந்த நல்லதை நீங்கள் செய்தாலும் கடவுள் அவற்றை முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.

[2:217] புனித மாதங்களைப் பற்றியும், அவற்றில் சண்டையிடுவது பற்றியும் அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள்: “அவற்றில் சண்டையிடுவது அதன் புனிதத்தை அவமதிப்பதாகும். ஆயினும் கடவுள்-ன் பாதையை விட்டு தடுப்பதும் மேலும் அவரையும், புனித மஸ்ஜிதின் புனிதத்தையும் நம்ப மறுப்பதும் மேலும் அதன் மக்களை வெளியேற்றுவதும், கடவுள்-ன் பார்வையில் அதைவிடப் பெரும் பாவச் செயலாகும். அடக்குமுறை கொலையை விட மோசமானதாகும்,” என்று கூறுவீராக. அவர்களால் முடியுமேயானால் உங்களை, உங்கள் மார்க்கத்தை விட்டு திருப்புவதற்காக எப்போதும் சண்டையிடுவார்கள். உங்களுக் கிடையில் தங்கள் மார்க்கத்தை விட்டும் திரும்பியவர்களாகவும், மேலும் நம்பமறுத்தவர் களாகவும் இறந்துவிடுபவர்கள், இந்த வாழ்விலும் மேலும் மறுவுலகிலும் தங்கள் செயல்களை பயனற்றதாக்கி கொண்டவர்கள் ஆவார்கள். இவர்கள் நரகவாசிகளாவார்கள், அதில் அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள்.