குர்ஆன் 2:215 — பசுங்கன்று
கொடுப்பதைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள்: “நீங்கள் கொடுக்க கூடிய தர்மம், பெற்றோர்களுக்கும் உறவினர் களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும் மற்றும் வழிப்போக்கர்களுக்கும் சென்றடைய வேண்டும்” என்று கூறுவீராக. எந்த நல்லதை நீங்கள் செய்தாலும் கடவுள் அவற்றை முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.
[2:214] உங்களுக்கு முன்னிருந்தோர் சோதிக்கப் பட்டது போல் சோதிக்கப்படாமல் சுவனத்தில் நுழைந்து விடலாம் என்று நீங்கள் எதிர்பார்க் கின்றீர்களா? அவர்கள் துன்பத்தைக்கொண்டும், இன்னல்களைக் கொண்டும் சோதிக்கப்பட்டார்கள். மேலும் தூதரும், அவருடன் நம்பிக்கைகொண்டோரும் “கடவுள்-ன் வெற்றி எங்கே”? என்று கூறும் வரை அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள். கடவுள்-ன் வெற்றி அருகிலேயே உள்ளது.
[2:216] நீங்கள் விரும்பாத போதும் சண்டையிடுவது உங்கள் மீது சுமத்தப்படலாம். ஆனால் உங்களு க்கு நன்மையான சிலவற்றை நீங்கள் வெறுக்கக் கூடும். மேலும் உங்களுக்கு தீமையான சிலவற்றை நீங்கள் விரும்பக் கூடும். நீங்கள் அறியாத பொழுதும் கடவுள் அறிவார்.