குர்ஆன் 2:214 — பசுங்கன்று
உங்களுக்கு முன்னிருந்தோர் சோதிக்கப் பட்டது போல் சோதிக்கப்படாமல் சுவனத்தில் நுழைந்து விடலாம் என்று நீங்கள் எதிர்பார்க் கின்றீர்களா? அவர்கள் துன்பத்தைக்கொண்டும், இன்னல்களைக் கொண்டும் சோதிக்கப்பட்டார்கள். மேலும் தூதரும், அவருடன் நம்பிக்கைகொண்டோரும் “கடவுள்-ன் வெற்றி எங்கே”? என்று கூறும் வரை அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள். கடவுள்-ன் வெற்றி அருகிலேயே உள்ளது.
[2:213] நற்செய்திகளுடனும், அதே சமயம் எச்சரிக்கை செய்பவர்களாகவும் வேதம்வழங்கப்பட்டவர் களைக் கடவுள் அனுப்பிய போது மக்கள் ஒரே சமூகமாகவே இருந்தனர். மக்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகளில் தீர்ப்பு அளிப் பதற்காக, அவர் அவர்களுடன் உண்மையைக் கொண்ட வேதத்தை இறக்கி அனுப்பி வைத் தார். எதிர்மறையாக, எவர்கள் வேதத்தைப் பெற்றார்களோ, அவர்களுக்கு தெளிவான சான்றுகள் கொடுக்கப்பட்ட போதிலும், புதிய வேதத்தை ஏற்க மறுத்தனர். இதற்கு அவர் களிடமிருந்த பொறாமையே காரணம். கடவுள் அவருடைய நாட்டத்திற்கு இணங்க, மற்றவர்கள் அனைவராலும் மறுக்கப்படுகின்ற சத்தியத்தின் பால் நம்பிக்கை கொண்டோரை வழி நடத்து கின்றார். எவர் நேர்வழியை * நாடுகின்றாரோ அவரைக் கடவுள் வழிநடத்துகின்றார்.
[2:215] கொடுப்பதைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள்: “நீங்கள் கொடுக்க கூடிய தர்மம், பெற்றோர்களுக்கும் உறவினர் களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும் மற்றும் வழிப்போக்கர்களுக்கும் சென்றடைய வேண்டும்” என்று கூறுவீராக. எந்த நல்லதை நீங்கள் செய்தாலும் கடவுள் அவற்றை முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.